Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மமிதா பைஜூ வாழ்க்கையில் விளையாடிய டாக்டர் கனவு

சென்னை: திரைக்கு வந்த ‘பிரேமலு’, ‘ரெபல்’ ஆகிய படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, சூர்யாவுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். கொச்சியில் பிஎஸ்சி சைக்காலாஜி படிக்க தொடங்கிய மமிதா பைஜூ, சினிமாவில் நடிக்க வந்தபோது, அந்த படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் மமிதா பைஜூ அளித்துள்ள பேட்டியில், ‘சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நான், டாக்டராக வேண்டும் என்று கனவு கண்ேடன். ஆனால், எதிர்பாராவிதமாக சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது கூட டாக்டர் கனவு தொடர்ந்தது. ஆனால், நிறைய படங்களில் நடித்த பிறகு கனவு காண்பதை நிறுத்திவிட்டேன். இதையெல்லாம் நினைத்து எனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார்.

பிறகு எனது ஆர்வத்தை புரிந்துகொண்டு, தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆதரவு கொடுத்தார். இதற்கு காரணம், அவர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டார். காரணம், அவர் நன்றாக படிப்பார். பார்த்தீர்களா, டாக்டர் கனவு எனது வாழ்க்கையில் எப்படி விளையாடி இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.