Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழில் மீண்டும் மம்மூட்டி

சென்னை: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. அவருக்கு வயது 70 ஆகிவிட்டாலும் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்நிலையில் பேரன்பு படத்துக்கு பிறகு அவர் தமிழில் நடிக்கிறார். ‘பிராமயுகம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் ஹாரர் த்ரில்லர் கதைக்களம் கொண்டது. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் படத்தை ராகுல் சதாசிவன் இயக்கவுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் பூஜையுடன் தொடங்கியது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறும்போது, ‘மம்மூக்காவை இயக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பிரமயுகம்’ கேரளாவின் இருண்ட காலத்தை மையமாகக் கொண்ட கதை’ என்றார். ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு கொச்சி மற்றும் ஒட்டப்பாலத்தில் நடைபெற உள்ளது. இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.