Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கும் மம்மூட்டி

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி, கடந்த மார்ச் மாதம் முதல், உடல்நிலை பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண நலம்பெற வேண்டும் என்று, அவரது ரசிகர்கள் வேண்டிக்கொண்டனர். மேலும், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் சபரிமலைக்கு சென்று, மம்மூட்டி நலம்பெற மனமுருகி பிரார்த்தனை செய்தார். இந்நிலையில், கடந்த மாதம் மம்மூட்டியின் உடல்நிலை சீராகிவிட்டது என்றும், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால், மம்மூட்டி, பஹத் பாசில், நயன்தாரா நடிக்கும் `பேட்ரியாட்’ என்ற படத்தில், சுமார் 16 வருட இடைவெளிக்கு பிறகு மோகன்லால், மம்மூட்டி மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மம்மூட்டிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 8 மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று உடல்நிலை தேறியிருக்கும் மம்மூட்டி, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். வரும் அக்டோபர் முதல் வாரத்தில் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்குகிறது.