கன்னியாஸ்திரியாக இருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டுக்கு சென்று தங்குகிறார். அப்போது ஏற்பட்ட சில திடீர் சம்பவங்களால் மனம் மாறிய அவர், இந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறி, மற்ற பெண்களை போல் வாழ ஆசைப்படுகிறார். இதனால் அவரை வெறுத்து ஒதுக்கும் அம்மா, அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். மனமுடைந்த சாய்ஸ்ரீ பிரபாகரன், சாத்தானை வழிபடும் குழுவினருடன் இணைகிறார் பிறகு அவர் என்ன ஆகிறார் என்பது மீதி கதை.
சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்த சாய்ஸ்ரீ பிரபாகரன், வழக்கமான பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார். சாத்தான் வழிபாட்டு குழு தலைவர் பாவெல் நவகீதன் கச்சிதமாக நடித்துள்ளார். சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர்.
மணிஷங்கர்.ஜியின் ஒளிப்பதிவு யதார்த்தமாக இருக்கிறது. அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் ஆகியோர் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது. இளம் பெண்ணின் போராட்டத்தை பற்றி சொன்ன இயக்குனர் ஹரி கே.சுதன், அதற்கு ஏன் குறிப்பிட்ட மதத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுவது பலவீனம். மாற்றி யோசித்துஇருக்கலாம்.