Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மரியா ஜூலியானா திடீர் திருமணம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இணையதளங்களில் வைரலானவர், மரியா ஜூலியானா. பிறகு டி.வி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். தமிழில் ‘மன்னர் வகையறா’, ‘நான் சிரித்தால்’, ‘நொடிக்கு நொடி’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’, ‘அம்மன் தாயி’ போன்ற படங்களில் நடித்தாலும், அவரால் ரசிகர்களின் மனதை ஈர்க்க முடியவில்லை.

இந்நிலையில், திடீரென்று மரியா ஜூலியானாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், தனது வருங்கால கணவரின் முகத்தை வெளியுலகிற்கு காட்டவில்லை. விரைவில் அவரது திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.