‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனாவுக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கிறது. 2016ல் ‘க்ரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ‘தி கேர்ள்ஃப்ரண்ட்’ என்ற தெலுங்கு படம் வெளியானது. ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
அதை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், விஜய் தேவரகொண்டாவுடன் நடக்கும் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘திருமணம் குறித்த தகவலை இப்போது நான் உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை. அதுகுறித்து பேச வேண்டிய நேரம் வந்தால், கண்டிப்பாக நாங்கள் தெரிவிப்போம். விஜய் தேவரகொண்டாவிடம் வேலை விஷயமாக எதுவும் நான் பேச மாட்டேன்.
80 சதவீத நேரம் வேலையை பற்றி வீட்டில் பேச மாட்டேன். வேலை சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் எனக்கு மனதில் சுமையாக இருந்தால் மட்டுமே ஆலோசனைக்காக விஜய் தேவரகொண்டாவிடம் பேசுவேன். நான் என் வேலைக்கு 100 சதவீதம் மரியாதை கொடுக்கிறேன். ஆனால், வீட்டில் இருக்கும்போது வேலையை பற்றி எதுவும் பேச மாட்டேன். அதை என் கொள்கையாக கடைப்பிடிக்கிறேன்’ என்றார்.
