Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வருகிறது மார்வெல் கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட்

Marvel Cinematic Universe (MCU) தனது அதிரடியான காட்சிகளுடன் கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்படத்தை வெளியிட தயாராக உள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் சிவப்பு ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் போர்ட், அமெரிக்க அதிபர் தண்டர்போல்ட் ராஸ் ஆகவும் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தனிச்சிறப்புகளைப் பற்றி ஹாரிசன் போர்ட் கூறுகையில், "இதில் அரசியல் திரில்லர் , சூழ்ச்சிகள், மார்வெல் சிறப்பு கமர்சியல் மசாலா சேர்க்கப்பட்டிருக்கிறது. எமோஷனலாகவும் இப்படம் நல்ல திரையரங்க அனுபவம் கொடுக்கும் ' என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் " மார்வெல் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையான குணாதிசயங்களை கொண்டவை. ஆனால், அமெரிக்க அதிபராக நடிக்கும் எனக்கான கதாபாத்திரத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான கோணத்தையும், மனிதநேயத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினேன்." அதுவும் இந்தப் படத்தில் சாத்தியம் ஆகியிருக்கிறது.

ஜூலியஸ் ஓனாஸ் இயக்கியுள்ள கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் படத்தில் ஆந்தனி மெக்கி, ஹாரிசன் போர்ட், டேனி ராமிரெஸ், ஷிரா ஹாஸ், சோஷா ரோக்குமோர், கார்ல் லம்ப்லி, லிவ் டைலர், மற்றும் டிம் பிளேக் நெல்சன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 14 முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது!