Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

15 வருடங்களுக்கு பிறகு கவுதமன் இயக்கத்தில் படையாண்ட மாவீரா

சென்னை: ‘மகிழ்ச்சி’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து வி.கவுதமன் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. பூஜிதா பொன்னடா ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ் கவுதமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், இளவரசு, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தீனா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். வில்லன்களாக ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், மதுசூதன ராவ், கபீர் துஹான் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வைரமுத்து வரிகளில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் 5 சண்டை காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்படம் பற்றி கவுதமன் பேசும்போது, ‘‘இப்படம் வெளியானப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும். சாதி, மதம், இனம் போன்ற தீய எண்ணங்கள் இருக்கும் மனிதர்கள் இப்படத்தை பார்த்தால் அவர்களின் மனதை சுத்தப்படுத்தும். தமிழ்க்குடி ஆண்டாண்டு காலமாக சண்டையிட்டு தன்னைத்தானே மாய்து கொண்ட கூட்டம், மீண்டும் அதுபோல் இல்லாமல் இந்த மண்ணையும், மக்களையும் காக்க வேண்டும் என்பதை சொல்லும் இப்படத்திற்கு ‘படையாண்ட மாவீரா’ என பெயர் வைத்தேன்’’ என்றார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.