மலையாளத்தில் பல படங்களில் நடித்துவிட்டு, என்.லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மீரா ஜாஸ்மின். தொடர்ந்து விஜய்யுடன் ‘புதிய கீதை’, அஜித் குமாருடன் ‘ஆஞ்சநேயா’, மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’, விஷாலுடன் ‘சண்டக்கோழி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். மலையாளத்தில் நடித்த ‘பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்’...
மலையாளத்தில் பல படங்களில் நடித்துவிட்டு, என்.லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மீரா ஜாஸ்மின். தொடர்ந்து விஜய்யுடன் ‘புதிய கீதை’, அஜித் குமாருடன் ‘ஆஞ்சநேயா’, மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’, விஷாலுடன் ‘சண்டக்கோழி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். மலையாளத்தில் நடித்த ‘பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இந்நிலையில் அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்ததால், 2014ல் அனில் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்தார்.
பிறகு உடல் எடை கூடிய மீரா ஜாஸ்மின், தீவிர உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து, ‘மகள்’ என்ற மலையாள படத்தில் ஜெயராம் ஜோடியாக நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். ஓடிடியில் வெளியான ‘டெஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் சித்தார்த் மனைவியாக நடித்த அவர், சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தற்போது நீல நிற உடையணிந்து, தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, நெற்றியில் குங்குமத்துடன் அழகாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், ‘43 வயதிலும் மீரா ஜாஸ்மின் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார்’ என்று வர்ணித்து வருகின்றனர்.