சென்னை: ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‘96’ படம் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. காதல் கதை படங்களில் சிறந்த காவிய படைப்பாக இன்றும் 96 படம் போற்றப்படுகிறது. அதன் பிறகு மனித உறவுகளின் வலிமையை போற்றும் வகையில் ‘மெய்யழகன்’...
சென்னை: ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‘96’ படம் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. காதல் கதை படங்களில் சிறந்த காவிய படைப்பாக இன்றும் 96 படம் போற்றப்படுகிறது. அதன் பிறகு மனித உறவுகளின் வலிமையை போற்றும் வகையில் ‘மெய்யழகன்’ படத்தை பிரேம்குமார் இயக்கினார். அரவிந்த் சாமி, கார்த்தி நடித்த இந்த படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
இதையடுத்து மூன்றாவது படத்தை பிரேம்குமார் ஆரம்பிக்கிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் ஹீரோயின், மற்ற நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்த படத்தை முடித்து விட்டு அடுத்த ஆண்டு ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம்குமார் இயக்க உள்ளார். அந்த படத்ைதயும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.