Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மெட்டா ஏஐக்கு தீபிகா படுகோன் குரல்: புது சாதனை படைத்தார்

மும்பை: மெட்டா ஏஐ-க்கு குரல் கொடுத்த முதல் இந்திய பிரபலம் என்ற சாதனையை செய்திருக்கிறார் தீபிகா படுகோன். இதுபற்றி தீபிகா வெளியிட்ட பதிவில், ‘‘மெட்டா ஏஐ-யில் நானும் ஒரு அங்கமாகி உள்ளேன். என் குரல் நீங்கள் இனி ஆங்கிலத்தில் கேட்கலாம்’’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாட்ஸ் அப், ரேபான் மெட்டா, ஸ்மார்ட் கண்ணாடிகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பல தளங்களில் அவரது தனித்துவமான குரல் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு முன்பு மெட்டா ஏஐக்கு ஜான் சீனா, ஜுடி டென்ச் உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தார்கள். இப்போது தீபிகாவின் குரலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த மெட்டா ஏஐ மூலம் தீபிகாவின் குரல் ஒலிக்கப் போகிறது.