Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மியா கலீபா பதிவு

நியூயார்க்: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான போர் நடந்து வரும் நிலையில், இருதரப்பிலும் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி வருகின்றனர். பிரபல ஹாலிவுட் மாடல் அழகி மியா கலீபா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நீங்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருக்காமல், பாலஸ்தீனத்தின் நிலைமையைப் பார்க்க முடிந்தால், நீங்கள் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வரலாறு சரியான நேரத்தில் உங்களுக்கான பாடத்தைக் கற்பிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது பதிவை பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர், ‘இப்பதிவை வெளியிடும் முன்பு நீங்கள், ஹமாஸ் தீவிரவாதி கள் செய்த காட்டுமிராண் டித்தனத்தைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள். நீங்களும் வரலாற்றின் முகத்தைப் பார்த்தே தீருவீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.