சென்னை: சினிமாத்துறையில் நைட் பார்ட்டிகளில் மதுவுடன் போதைப் பொருள்களும் பயன்படுத்துவதாக சமீபகாலமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதான பிறகு இது தொடர்பான தகவல்களை விஜய் ஆண்டனி, சுசித்ரா உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மிட்நைட் பார்ட்டியில் தமன்னா கலந்துகொண்டு போதையில் டான்ஸ் ஆடியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
சென்னை: சினிமாத்துறையில் நைட் பார்ட்டிகளில் மதுவுடன் போதைப் பொருள்களும் பயன்படுத்துவதாக சமீபகாலமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதான பிறகு இது தொடர்பான தகவல்களை விஜய் ஆண்டனி, சுசித்ரா உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மிட்நைட் பார்ட்டியில் தமன்னா கலந்துகொண்டு போதையில் டான்ஸ் ஆடியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை பிரக்யா கபூர் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பில்லி மாணிக் இருவரின் பிறந்த நாளையொட்டி நடந்த மிட்நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார் தமன்னா.
அவர்களுடன் நடிகைகள் மிருணாள் தாகூர், மெளனி ராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார்கள். பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அதில் பலவகை வெளிநாட்டு மதுபானங்கள் பரிமாறப்பட்டிருக்கிறது. கடும் போதையில் மற்ற நடிகைகளுடன் சேர்ந்து தமன்னா டான்ஸ் ஆடிய போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ‘போதைப் பொருள் பயன்பட்டால் சினிமாத்துறையில் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற பார்ட்டிகள் அவசியமா? காவல்துறையினர் இதுபோன்ற பார்ட்டிகளையும் கண்காணிக்க வேண்டும்’ என நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.