மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களை தொடர்ந்து, தற்போது 3ம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதல் பாகத்தில் மோகன்லால் மனைவியாக மீனா, மகள்களாக அன்ஷிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது அவர்கள் 3ம் பாகத்திலும் நடிக்கின்றனர். கேரளாவிலுள்ள தொடுபுழாவில் படப்பிடிப்பு நடந்து வரும் இடத்துக்கு அருகிலுள்ள ஜிம்மில் மோகன்லால் பயிற்சி பெற்று வருகிறார்.
அவரது ஜிம் பார்ட்னராக இருக்கும் அன்சிபா ஹாசன், தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். ஜிம்மில் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்ட அவர், சமீபத்தில் நடந்த ‘அம்மா’ என்ற மலையாள நடிகர் சங்க தேர்தலில், இணை செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மலையாள படங்களில் அதிகமாக நடிக்கும் அவர், பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.