Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மோகன்லால் விலகியது அதிர்ச்சியாக இருந்தது: அம்மா தலைவர் ஸ்வேதா மேனன்

கொச்சி: ‘அம்மா’ என்று சொல்லப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக வெற்றிபெற்ற ஸ்வேதா மேனன், மலையாள நடிகர் சங்க வரலாற்றின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்காக அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:

மலையாள நடிகர் சங்கம் சம்பந்தமாக மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் தலைமையிலான அணிகளில் நானும் ஒரு பகுதியாக இருந்துள்ளேன். அப்போது அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நிஜமாகவே இப்போது நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் என்று சொல்லலாம். நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் சில மாற்றங்களை செய்து, பிறகு அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நம்புகிறேன்.

‘அம்மா’ என்ற அமைப்பு சரிந்துவிடாமல், அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து மோகன்லால் விலகியது அதிர்ச்சியாக இருந்தது. எதையும் அவர் எளிதில் விட்டுக்கொடுக்கும் நபர் அல்ல. ஆனால், நான் வரலாற்றை மாற்றி எழுத வரவில்லை. சங்கத்துக்கான செயல்பாடுகளை அடுத்தடுத்து முன்னோக்கி எடுத்துச் செல்வேன்.