Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மோகன்லாலுக்கு ஆதரவு தெரிவித்த வில்லன்

கடந்த ஆண்டு கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, மலையாள நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த பல நடிகர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இதை தொடர்ந்து அதற்கு தார்மீக பொறுப்பேற்ற தலைவர் மோகன்லால், ஒட்டுமொத்த நிர்வாக குழுவுடன் இணைந்து ராஜினாமா செய்தார். விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவீந்தர் அளித்த பேட்டியில், ‘மோகன்லாலை போன்ற ஒருவரே நடிகர் சங்க தலைமை பொறுப்புக்கு சரியான நபர்.

ஆனால், யாரோ செய்யும் தவறுக்கு துரதிஷ்டவசமாக அவர் பலிகடா ஆகியுள்ளார். நடிகர் சங்க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டிருந்தது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி. மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த 1990களில் தமிழ், மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர், ரவீந்தர். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது மலையாளத்தில் நடித்து வருகிறார்.