Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதிகம் தேடப்பட்ட நடிகை தீபிகா படுகோன்

இந்திய நடிகர்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடிக்கும் படங்களின் வசூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களை எத்தனைபேர் பின்தொடர்கின்றனர் என்பதை வைத்து மதிப்பிடலாம். அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், விஜய், பிரபாஸ் உள்பட பல முன்னணி நடிகர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அலியா பட், இர்பான்கான், ஆமிர் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், அக்‌ஷய் குமார் என்று, அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கின்றனர். இப்பட்டியலில் சமந்தா 13வது இடத்திலும், தமன்னா 16வது இடத்திலும், நயன்தாரா 18வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29வது இடமும், தனுஷ் 30வது இடமும் பிடித்துள்ளனர். இதில் பல முன்னணி நடிகர்களின் பெயர் இடம்பெறாதது, அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.