Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல மொழி நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பது ஏன்? மோகன்லால் பதில்

ஐதராபாத்: சமீபத்தில் வெளியான கண்ணப்பா படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருப்பது பற்றி மோகன்லால் கூறியது: வெவ்வேறு மொழிகளில் உச்ச நடிகர்களாக உள்ளவர்களுடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு புதிதல்ல. நான் இதற்கு முன்னர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் எல்லாம் கூட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளேன். கண்ணப்பா படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். எனக்கு அவர்களுடன் காட்சிகள் இல்லை என்றாலும் இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், பல மொழிப் படங்களை சேர்ந்த ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் போது அவை சினிமாவில் உள்ள எல்லைகளை தகர்த்து விடுகிறது. இதனால் ரசிகர்களுக்கு இடையில் இணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ரசிகர்களாக உள்ள மக்கள் மத்தியிலும் வேறுபாடுகள் களைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு மோகன்லால் கூறினார்.