Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கொலை பின்னணியில் ரெட் லேபிள்

சென்னை: கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை ‘ரெட் லேபிள்’ என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு. கைலாஷ் மேனன் இசை. படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.