சென்னை: ராணவ், நடிகை பாடினி குமார் நடிப்பில் உருவாகியுள்ள இசை ஆல்பம் ‘நீ என்னை நெருங்கையிலே’. ஓம் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் சார்பில் டாக்டர்.பி.சி.ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார். கேவி. வீடியோ கருத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார். யுனிவர்சல் ஸ்க்ரீன்கிராப்ட் இணை தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளது. ஜெயராஜ் சக்ரவர்த்தி இசையில், பாடலாசிரியர் மோகன்ராஜன் வரிகளில், நித்யாஸ்ரீ வெங்கட்ரமணன் குரலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மைக்கேல் தேவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘இந்த பாடல், கெளதம் மற்றும் குழலி கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பயணத்தின் மறுபக்கமாகவும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடனும் செவிகளுக்கு மட்டும் இன்றி கண்களுக்கும் இனிமை சேர்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது’ என்கிறது ஆல்பம் குழு.