Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இசையமைப்பாளர் சபேஷ், நடிகர் பூபதி மரணம்

சென்னை: இசையமைப்பாளர் சபேஷ் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 68. இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ். இவர் தனது மற்றொரு சகோதரர் முரளியுடன் சேர்ந்து ஆட்டோகிராப், இம்சை அரசன் 23ம் புலிகேசி, பட்டாளம், அரசாங்கம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தார். திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் இருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சபேஷ், நேற்று பகல் காலமானார்.

பூபதி மரணம்: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவின் ஒரே மகன் பூபதி (72), இயக்குனர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ என்ற படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஹீரோ விஜயனின் தம்பி வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ‘ஆராதனை’, ‘மணல் கயிறு’, ’குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மனைவி ரெடி’, ‘டில்லி பாபு’, ‘ராணித்தேனீ’, ‘நட்சத்திரம்’, ‘மானா மதுரை மல்லி’, ‘ஒரே ரத்தம்’ உள்பட 20 படங்களில் நடித்துள்ளார். மனோரமாவின் மறைவுக்குப் பிறகு தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் பூபதி வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பூபதி, வீட்டிலேயே நேற்று காலை காலமானார்.