Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து வைக்கும் ‘‘நாகரிக பயணம்‘‘!

ரிச் மூவிஸ் - டிஎஸ்கே மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. விவசாயத்தை மையமாகக் கொண்ட இக்கதை உருவாகியிருக்கிறது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் இசை அமைப்பாளர் திவாகர், காண்டியப்பன், அன்னகொடி கன்னன, வர்ணிகா, முபாரக் அலி, ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜாகிர் உசேன் அவர்கள் பேசியதாவது; இன்னும் 25 வருடங்கள் பிறகு எல்லார் வீட்டிலும் அனைத்து பொருட்களும் இருக்கும் ஆனால் அரிசி இருக்காது , ஏனென்றால் விவசாயம் அழிந்து விடும் நிலையில் உள்ளது, விவசாயத்தை சார்ந்த திரைப்படம் எடுக்கலாம் என்று இயக்குநர் தாஸ் சடைக்காரன் என்னிடம் கூறினார், ஆதலால் நாங்கள் இருவரும் சேர்ந்து இத்திரைப்படம் எடுத்துள்ளோம் என்று கூறினார்.

இயக்குநர் தாஸ் சடைக்காரன் பேசியதாவது; இப்படம் 40-நாட்கள் கடின உழைப்பில் எடுத்துள்ளோம்,மக்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றும்,வந்திருந்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம் பேசியதவாது; குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி சிலர் வருவாய் காண்கிறார்கள்,கர்நாடகவில் இன்று வரை தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை,அன்றைய திரைப்படப்பிடிப்பில் எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவே இந்த நிலை மாற வேண்டும்.கடைசியில் இளைஞர்கள் யாவரும் மது அருந்தி உடலை வருத்திக்கவேண்டாம் ,உடல் தான் உங்கள் சொத்து எனவே உடலை பாதுகாத்து கொள்ளுங்கள், இறுதியில் தமிழ் வாழ்க என்று உறக்கமிட்டு உரையை முடித்தார்.படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் ஏகலைவன் ஜாகுவார் தங்கம் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.