Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சமந்தாவை போல் வினோத நோய் தசைக் கோளாறால் அவதிப்படும் நந்திதா

பெங்களூரு: ‘ஹிடிம்பா’ கன்னட படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. தமிழில் அட்டக்கத்தி, முண்டாசுப்பட்டி, கபடதாரி உள்பட பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இந்நிலையில் சமந்தா போல் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நந்திதா ஸ்வேதா கூறியது: நான் ஃபைப்ரோமியால்ஜியா என்ற தசைக் கோளாறால் அவதிப்படுகிறேன். இதனால் எனது உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய வேலை கூட தசைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் கனமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது.

சில நேரங்களில் உடல் அசைவுகளுக்கே சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஃபைப்ரோமியால்ஜியா என்பது தசைக் கோளாறு ஆகும், இது பாதிக்கப்பட்டவரின் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இது மிக விரைவாக சோர்வை ஏற்படுத்துகிறது. இது தவிர, மோசமான நினைவாற்றல் மனநோயின் அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் ‘ஹிடிம்பா’ படத்திற்காக இதையெல்லாம் தாண்டி உழைத்திருக்கிறேன். தூங்காமல் உழைத்தேன். படத்துக்காக இதையெல்லாம் சகித்துக் கொண்டு உடல் எடையை குறைத்தேன் என்றார்.