Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நர்கீஸ் பக்ரி காதல் திருமணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியில் அதிக படங்களில் நடிக்கும் நர்கீஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார். இந்தியில் ‘மெட்ராஸ் கபே’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹவுஸ்புல் 3’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘சாகசம்’ படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். இந்நிலையில், காஷ்மீரில் பிறந்த அமெரிக்க தொழிலதிபர் டோனி என்பவரை கடந்த சில வருடங்களாக அவர் காதலித்து வந்த தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது அவர்கள் திடீரென்று திருமணம் செய்துகொண்டனர். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த திருமணத்தில் நெருக்கமானர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சில மாதங்களுக்கு முன்பு நர்கீஸ் ஃபக்ரி அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் புதிதாக ஒருவர் வந்திருப்பதாகவும், தற்போது அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால், அந்த நபர் யார் என்ற விவரத்தை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில்தான் அவரது திருமண தகவல் வெளியாகியுள்ளது.