இணையத்தில் தற்போது நடிகை ஒருவரின் சிறுவயது போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அது யார்? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அவர் வேறு யாருமில்லை, புதிய நேஷனல் கிரஷ் ருக்மணி வசந்த் தான். தமிழில் ‘ஏஸ்’, ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ருக்மணி வசந்த் சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது, கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ என்ற பான் இந்தியா படத்திலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு சில பெரிய படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதன் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இவரது சிறுவயது போட்டோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
