தமிழில், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘விடாமுயற்சி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், ரெஜினா. மற்ற மொழிகளிலும் நடித்துள்ள அவர், இந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் அதிக கவனம் செலுத்தி நடிக்கிறார். இந்நிலையில், தேசிய விருது பெற்ற பாலிவுட் டைரக்டர் மதுர் பண்டார்கர் எழுதி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதற்கு ‘தி...
தமிழில், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘விடாமுயற்சி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், ரெஜினா. மற்ற மொழிகளிலும் நடித்துள்ள அவர், இந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் அதிக கவனம் செலுத்தி நடிக்கிறார். இந்நிலையில், தேசிய விருது பெற்ற பாலிவுட் டைரக்டர் மதுர் பண்டார்கர் எழுதி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதற்கு ‘தி வைவ்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். பெண்களின் வலிமை மற்றும் உணர்வுகள், தைரியமான செயல்கள் குறித்து சொல்லும் படமாக உருவாக்கப்படுகிறது.
‘ராக்கெட் பாய்ஸ்’ போன்ற இந்தி வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் கிளாமராகவும், சிறப்பாகவும் நடித்துள்ள ரெஜினா, தனது ஒட்டுமொத்த நடிப்புத்திறமையையும் மதுர் பண்டார்கர் பெரிய திரையில் கொண்டு வருவார் என்று உறுதியாக நம்புகிறார். பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கை முறைகளையும் மையப்படுத்தி கதைகளை எழுதி ‘ஃபேஷன்’, ‘ஹீரோயின்’ ஆகிய படங்களை மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். ‘தி வைவ்ஸ்’ என்ற படத்தில் மீண்டும் அதே பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ரெஜினாவின் அழுத்தமான நடிப்பு, மதுர் பண்டார்கரின் வலுவான கதை சொல்லும் பாணி ஆகியவை, ‘தி வைவ்ஸ்’ படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இப்படத்தின் மூலம் தேசிய விருது கிடைக்கும் என்று ரெஜினா நம்புகிறார்.