இசட் ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ என்ற படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார். இவர் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர். உமேஷ் குமார் பன்சால், நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ்.லலித் குமார், அக்ஷய் கெஜ்ரிவால், கே.எஸ்.மயில்வாகனன் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஜென் மார்ட்டின் இசை அமைக்க, ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்கிறார். பி.சேகர் அரங்கம் அமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். பிருந்தா நடனப் பயிற்சி அளிக்க, தினேஷ் காசி சண்டைக் காட்சி அமைக்கிறார். சி.யூ.முத்துசெல்வன் கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நயன்தாரா, கவின், கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி நடிக்கின்றனர். காதல் மற்றும் குடும்பக்கதை கொண்ட படமாக உருவாக்கப்படுகிறது.