Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நெகட்டிவ் தகவல்களை நீக்க பணம் கேட்கிறாங்க: பூஜா ஹெக்டே பரபரப்பு புகார்

மும்பை: ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்தின் இந்திய பதிப்பு பேட்டியில் பூஜா ஹெக்டே பேசியதாவது: என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப ஒரு குழு செயல்பட்டது.இது என் பெற்றோரையும் மிகவும் பாதிக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு நம்மைக் கீழே இழுக்க முயன்றால், நாம் அவர்களைவிட மேலே இருக்கிறோம் என்பதே பொருள். அதனால், முதலில் இதை ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொண்டேன்.

ஆனால், எல்லை மீறிய அர்த்தமற்ற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பணம் செலவழித்து இந்தச் செயலை செய்கிறார்கள் என்பதை என் குழுவின் மூலம் அறிந்துகொண்டேன். மேலும், இந்தச் செயலில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் தீவிரமாக ஈடுபடுகின்றன. சில மீம் பேஜ்களும், ‘பணம் கொடுத்தால் எதிர்மறை பதிவுகளை அகற்றிவிடுவோம்’ என்று கூறியது அதிர்ச்சியளித்தது.

இதன் மூலம், திரைப்படத் துறையின் மறைமுகமான இருண்ட யுக்திகள் குறித்து எனக்குத் தெரியவந்தன. ஆனால், இந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும் ரசிகர்கள் நேரில் காட்டும் தூய்மையான அன்பைக் காணும்போது உருகி மறைந்துவிடுகின்றன. இந்த அன்பே உண்மையான சான்று. இணையத்தில் வரும் விஷத்தன்மையுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மற்றும் சிலர் உருவாக்கும் போலிக் கணக்குகளால் உரு வாக்கப்படுபவைதான். இவ்வாறு பூஜா ஹெக்டே பேசியுள்ளார்.