சென்னை: ‘ஹார்ட் பீட்’ வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரைக்குள் நுழைந்துள்ளார். சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கும் சர்வா, படிக்கும்போதே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார், தற்போது வெப் சீரிஸில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தன் திறமையால் இப்போது வெள்ளித்திரையிலும் அசத்த ஆரம்பித்துள்ளார். ‘ஆர்.கே. நகர’...
சென்னை: ‘ஹார்ட் பீட்’ வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரைக்குள் நுழைந்துள்ளார். சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கும் சர்வா, படிக்கும்போதே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார், தற்போது வெப் சீரிஸில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தன் திறமையால் இப்போது வெள்ளித்திரையிலும் அசத்த ஆரம்பித்துள்ளார். ‘ஆர்.கே. நகர’ மற்றும் ‘தமிழ் ராகர்ஸ்’ போன்ற படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்துள்ளார்.
தற்பொழுது, அதர்வா நடிப்பில் இம்மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள ‘தணல்’ படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறனை மேலும் சிறப்பாக்க, நெகட்டிவ் கதாபாத்திரங்களை கேட்டு வரும் சர்வா. “நல்ல நெகட்டிவ் ரோல்ஸ் கிடைக்கும்போது தான், நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்ட முடியும், நல்ல நெகட்டிவ் பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.