Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாலத்தீவில் நேஹா ஷெட்டி

‘மெஹபூபா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் நேஹா ஷெட்டி. அதனைத் தொடர்ந்து ‘டிஜே தில்லு’ படத்தில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். பிறகு, ‘ரூல்ஸ் ரஞ்சன்’, ‘பெதுருலங்கா 2012’ ஆகிய படங்களில் நடித்தார். கடந்தாண்டு ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நேஹா ஷெட்டி தற்போது மாலத்தீவில் தனது நேரத்தை கழித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்திற்கு பிறகு அவர் எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதனால் அவரது அடுத்த படம் என்ன என்பதை அறியவும் மீண்டும் அவரை திரையில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.