Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரபுதேவாவுடன் நடனமாடுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை: மடோனா செபாஸ்டியன்

சென்னை: மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடித்த செலின் என்ற கேரக்டரின் மூலம் புகழ்பெற்ற மடோனா செபாஸ்டியன், தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, தனுஷ் இயக்கி நடித்திருந்த ’ப.பாண்டி’, விஜய்யுடன் ‘லியோ’ உள்பட பல படங்களில் இயல்பான நடிப்பின் மூலம் பாராட்டு பெற்றார். தற்போது பிரபுதேவாவுடன் நடித்துள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் குறித்து அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்த கேரக்டர்கள் தனித்துவமானவை. கமர்ஷியல் படத்தில் நடித்தது இதுவே முதல்முறை. கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும்.

இப்படத்தில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் எனக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார். அபிராமி, யாஷிகா ஆனந்த் உள்பட மற்ற நடிகைகளுக்கும் சிறப்பான கேரக்டர் கிடைத்துள்ளது. கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் இதில் டார்க் காமெடி, மிஸ்ட்ரி கலந்திருக்கும். பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும், நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. அவருடன் நடனமாடியது மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நல்ல அனுபவமாக அமைந்தது. இப்படத்தை ட்ரான்சிண்டியா மீடியா அன்ட் எண்டர் டெயின்மெண்ட் சார்பில் ராஜன், நீலா இணைந்து தயாரித்துள்ளனர்.