கடந்த 2013ல் ஆனந்த் எல்.ராய் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து வெளியான படம், ‘அம்பிகாபதி’. இந்தியில் தனுஷ் அறிமுகமான இப்படம், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது. தற்போது அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமாக்ஸ் காட்சியை இணைத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி படத்தை மீண்டும்...
கடந்த 2013ல் ஆனந்த் எல்.ராய் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து வெளியான படம், ‘அம்பிகாபதி’. இந்தியில் தனுஷ் அறிமுகமான இப்படம், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது. தற்போது அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமாக்ஸ் காட்சியை இணைத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி படத்தை மீண்டும் தமிழகத்தில் திரையிடுகிறது. இந்தியில் ‘ராஞ்சனா’ என்ற பெயரில் வெளியான இப்படம், ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
நடுத்தர குடும்ப இளைஞனின் ஒருதலைக் காதலை சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. 4கே தரத்தில், நவீன அட்மாஸ் சவுண்டுடன் படம் திரையிடப்படுகிறது. அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியை தொடர்ந்து அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட், ‘அம்பிகாபதி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறது. வரும் 28ம் தேதி தனுஷின் 42வது பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.