Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புதிய படைப்பாளிகளுக்காக ஓடிடி: சாக்‌ஷி அகர்வால் அறிவிப்பு

சென்னை: சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓடிடி தளம், ஏபிசி டாக்கீஸ். இதன் 4வது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்’ என்ற தமிழ்ப் பதிப்பின் அறிமுக நிகழ்ச்சியில், இதன் பிராந்திய விளம்பர தூதர் சாக்‌ஷி அகர்வால் பேசியதாவது: ‘தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்’ என்பது, ஏபிசி டாக்கீஸின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் புதிய திறமையாளர்களை கண்டுபிடிப்பதற்கும், ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகளுக்கு அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் முக்கிய மேடையாகும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை, முதல் பார்வையில் இருந்து நேரடியாகப் பதிவேற்றவும், பணம் சம்பாதிக்கவும் அனுமதிக்கிறது. இது உலகம் முழுக்க பார்வையாளர்களை சென்றடையவும், அவர்களின் படைப்புகளை பணமாக்கவும் அனுமதி அளிக்கிறது. பங்கேற்பாளர்கள் 2 லட்ச ரூபாய் பரிசுத்தொகைக்கு போட்டியிடுகின்றனர்.

அதிகமாகப் பார்க்கப்பட்ட படம் மற்றும் அதிக வசூல் செய்த படத்துக்கு தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த 3ம் தொடங்கியிருக்கும் சமர்ப்பித்தல் நிகழ்வு, வரும் நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. நவம்பர் 15 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை போட்டிக்கான காலமாகும். அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். gp@abctalkies.com என்ற முகவரிக்கு குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பி வைக்கலாம்.