Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் படத்துக்கு புதிய சிக்கல்: மெயில் மூலம் விளக்கம் கேட்ட ஹாலிவுட் நிறுவனம்

சென்னை: அஜித் நடித்துள்ள ‘விடா முயற்சி’ படம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஹாலிவுட் பட நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது. அஜித் குமார், திரிஷா, ரெஜினா, அர்ஜுன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘விடா முயற்சி’. மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், இது ஹாலிவுட்டில் 1997ல் வெளியான ‘பிரேக் டவுன்’ படத்தின் தழுவல் என தகவல் பரப்பினர். சமூக வலைத்தளத்தில் இந்த தகவல் பரவியதையடுத்து, ‘பிரேக் டவுன்’ படத்தை தயாரித்த டினோ டி லாரன்டீஸ், மர்த்தா டி லாரன்டீஸ் ஆகியோர் இது தொடர்பாக விளக்கம் கேட்டு லைகா நிறுவனத்துக்கு இமெயில் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பட வட்டாரம் தரப்பில் விசாரித்தபோது, ‘பிரேக் டவுன் படத்தின் தழுவல் என தவறான தகவல் ‘விடா முயற்சி’ பற்றி பரவியுள்ளது. ஓரிரு காட்சிகள் அந்த படத்தை நினைவுபடுத்தலாம். ஆனால் அந்த படத்துக்கும் ‘விடா முயற்சி’க்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதன் கதையே வேறு. இது குறித்த விரிவான விளக்கம் ஹாலிவுட் நிறுவனத்துக்கு அனுப்பப்படும்’ என ெதரிவிக்கப்பட்டுள்ளது.