மும்பை: தனது புதிய படத்தை ஓடிடிக்கு விற்க ஆமிர்கான் மறுத்துள்ளார்.ஆமிர்கான் தயாரித்து நடிக்கும் படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இதில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது. அதையடுத்து 5 முதல் 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுவது சகஜம். ஆனால் இந்த முறை தனது படத்தை...
மும்பை: தனது புதிய படத்தை ஓடிடிக்கு விற்க ஆமிர்கான் மறுத்துள்ளார்.ஆமிர்கான் தயாரித்து நடிக்கும் படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இதில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது. அதையடுத்து 5 முதல் 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுவது சகஜம். ஆனால் இந்த முறை தனது படத்தை ஓடிடிக்கு விற்கப்போவதில்லை என ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக யூடியூப்பில் வெளியிடப்போவதாகவும் அதற்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆமிர்கான் கடைசியாக நடித்த ‘லால் சிங் சட்டா’ படம் ஓடிடிக்கு பெரும் நஷ்டத்தை தந்தது. அதனால் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை குறைந்த விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் கேட்டிருக்கிறார். இதையடுத்து ஆமிர்கான் இந்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.