Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புதிய கதையில் புது படமாக மீண்டும் அந்த 7 நாட்கள் படத்தில் கே.பாக்யராஜ்

சென்னை: பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம், ‘அந்த 7 நாட்கள்’. காதல் மற்றும் திரில்லர் ஜானரில் உருவான இதில் அஜித் தேஜ், ஸ்ரீஸ்வேதா ஜோடியாக நடித்துள்ளனர்.

எம்.சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசை அமைத்துள்ளார். சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முக்கிய வேடங்களில் கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷிணி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்பிரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி, பங்கஜ் எஸ்.பாலாஜி நடித்துள்ளனர்.

படம் குறித்து முரளி கபீர்தாஸ் கூறுகையில், ‘நான் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திருக்காத நல்ல கதைகள் மற்றும் நல்லதொரு திரை அனுபவத்தை கொடுக்க முடிவு செய்தேன். இதுவரை திரையில் சொல்லப்படாத பல ஜானர்களும், கதைகளும் இருக்கின்றன. இதை இன்றைய இளம் தலைமுறையினர் துணிச்சலுடன் உருவாக்க வேண்டும். அதுபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது’ என்றார்.