ரவி மோகனுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்தவர், நிதி அகர்வால். இப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது பவன் கல்யாணுடன் அவர் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பான் இந்தியா படம், வரும் 24ம் தேதி திரைக்கு...
ரவி மோகனுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்தவர், நிதி அகர்வால். இப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது பவன் கல்யாணுடன் அவர் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பான் இந்தியா படம், வரும் 24ம் தேதி திரைக்கு வருகிறது. பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்திலும் அவர் நடித்துள்ளார். இவ்விரு படங்களை பெரிதும் நம்பியிருக்கும் நிதி அகர்வால், முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க கதை கேட்டு வருகிறார்.
தனது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இயங்கி வரும் அவர், சமீபத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், ‘உங்கள் அம்மாவின் போன் நம்பரைக் கொடுங்கள். நமது திருமணம் குறித்து அவரிடம் நான் விரிவாகப் பேச வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு மிகப் பொறுமையாக பதிலளித்த நிதி அகர்வால், ‘உண்மையாகவா கேட்கிறீர்கள்? நீங்கள் ரொம்ப குறும்பான நபர் சார்’ என்றார். இப்பதிவு வைரலாகி வருகிறது. ரசிகரை லாவகமாக மடக்கிய அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டியுள்ளனர்.