Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகர்கள் இல்லை டெக்னீஷியன்களும் இல்லை இந்தியாவின் முதல் ஏஐ படம் ரெடி

பெங்களூரு: மனிதர்களே நடிக்காமல் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது ஒரு கன்னட திரைப்படம். படப்பிடிப்பு செலவுகள் இல்லை, படப்பிடிப்பு இல்லை, ஆட்கள் தேவையில்லை என்ற நிலையில் ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க முடியுமா என 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டால் முடியாது என்பது தான் பதில். ஆனால், இன்று உலகமே ஏஐக்குள் அடங்கிவிட்டது. அப்படியிருக்கும்போது சினிமா மட்டும் விதிவிலக்கா? நரசிம்ம மூர்த்தி என்பவர் கன்னடத்தில் ‘லவ் யூ’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

95 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மாதம் ஒரே அறையில் கிராஃபிக்ஸ், ஏஐ உதவியுடன் நூதன் என்பவர் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் பட்ஜெட் ரூ.10 லட்சம்தான். அதுவும் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே. ட்ரோன் ஷாட்கள் உள்ளிட்டவை உண்மையான படத்தில் இருப்பது போலவே இதிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நாயகன் - நாயகி இடையிலான காதலையும், பிரிவையும் இந்தப் படம் பேசுகிறது. சென்சார் போர்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் ரிலீசாக உள்ளது.