Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நவ.21ல் மாஸ்க் ரிலீஸ்

சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் வழங்கும் மாஸ்க் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியுள்ளார். நாயகியாக ருஹானி ஷர்மாவும் பிரதான கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மத்ராஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. இப்படத்தின் முதல் பாடலான கண்ணுமுழி பாடல், இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், மாஸ்க் திரைப்படம் உலகம் முழுவது நவம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.