Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அமானுஷ்ய கதையில் நட்டி

சென்னை: உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘நீலி’. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார்.

2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகிறது. ‘‘அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. படத்துக்கான பிற நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடக்கிறது’’ என்கிறார் இயக்குனர் எம்எஸ்எஸ்.