ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தம்மா’ என்ற இந்தி படம், கடந்த அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபீசில் 176 கோடி வசூலித்துள்ளது. வரும் டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடித்து, கடந்த நவம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த படம், ‘தி கேர்ள் ஃபிரண்ட்’. இதை பின்னணி பாடகி சின்மயி கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கினார்.
வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகிறது. அதுபற்றிய விவரம் விரைவில் வெளியாகிறது. தற்போது இந்தியில் ‘காக்டெய்ல் 2’, தெலுங்கில் ‘மைசா’ ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதுவரை தனது காதலை தொடர முடிவு செய்துள்ள ராஷ்மிகா மந்தனா, மீடியாவை தனது திருமண விழாவுக்கு அழைக்கும் திட்டம் இல்லை என்றார்.
