Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பா.விஜய்யின் பெண் விழிப்புணர்வு பாடல்

சென்னை: பெண்களின் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின் தயாரிப்பில் புரட்சி ஏற்படுத்தியவர் பத்மஸ்ரீ விருது பெற்ற அருணாச்சலம் முருகானந்தம். தமிழகத்தை சேர்ந்த இவர், துணிகளை பயன்படுத்தும் சுகாதாரமற்ற முறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். இவரது வாழ்க்கை கதையை இந்தியில் ‘பேட்மேன்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் அக்ஷய் குமார் முருகானந்தம் வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில், பெண்களின் மாதவிடாய் சார்ந்த மூட நம்பிக்கைகளை தகர்க்கும் வகையிலும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாடல் ஒன்றை உருவாக்குவதற்காக கவிஞர் பா.விஜய் மற்றும் அருணாச்சலம் முருகானந்தம் இணைந்துள்ளனர். தாரா கிரியேஷன்ஸ் சுதிர் இப்பாடலை தயாரிக்கிறார். பா.விஜய் பாடல் வரிகளை எழுதுகிறார்.