கண்களை இமைக்கவே நேரம் இருக்காது: பிந்து மாதவி

சென்னை: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிந்து மாதவி, தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, சந்திரிகா ரவி ஆகியோருடன் இணைந்து ‘பிளாக்மெயில்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: எல்லா திரைக்கலைஞர்களும் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை...

ஜேஎஸ்கே சதீஷ் குமார் நடிக்கும் குற்றம் கடிதல் 2

By Ranjith Kumar
27 Jul 2025

சென்னை: பல வெற்றிப் படங்களை தயாரித்தது மட்டுமின்றி, விநியோகமும் செய்தவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார். தனது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், 2023ல் தேசிய விருது வென்றிருந்த ‘குற்றம் கடிதல்’ என்ற படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்குகிறார். ‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ ஆகிய படங்களை இயக்கியவரும் மற்றும் ‘அநீதி’, ‘தலைமைச்செயலகம்’ ஆகிய படங்களுக்கு...

ஹவுஸ் மேட்ஸ் ஹாரர் படமா? கனா தர்ஷன் விளக்கம்

By Ranjith Kumar
27 Jul 2025

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ராஜவேல் இயக்கியுள்ள படம், ‘ஹவுஸ் மேட்ஸ்’. இதில் ‘கனா’ தர்ஷன், காளி வெங்கட், ஹர்ஷா பைஜு, வினோதினி வைத்தியநாதன், அப்துல் லீ நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ‘பிரேமம்’ ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ளார். நிஷார் ஷெரீப் எடிட்டிங் செய்ய, சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார். ராகுல்...

மாரீசன் - திரைவிமர்சனம்

By Suresh
27 Jul 2025

ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த 98வது படம் " மாரீசன்" . சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருடன் தயா...

தலைவன் தலைவி - திரைவிமர்சனம்

By Suresh
27 Jul 2025

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் , சரவணன், ஆர்.கே.சுரேஷ், தீபா, காளி வெங்கட், மைனா, சென்ராயன், "படம் தலைவன் தலைவி". ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால்...

விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடு

By Ranjith Kumar
26 Jul 2025

சென்னை: வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாள் வருகிறது. இதை முன்னிட்டு, அவரது நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றிருந்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள இப்படம், ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கார்த்திக் வெங்கடேசன் மூலம் வெளியிடப்படுகிறது. விஜயகாந்தின் 100வது படமான ‘கேப்டன்...

போலீஸ் கேரக்டரில் தர்ஷன்

By Ranjith Kumar
26 Jul 2025

சென்னை: தர்ஷன், பாடினி குமார், மன்சூர் அலிகான், லால், சுஜித் சங்கர், முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன் நடித்துள்ள படம், ‘சரண்டர்’. அப்பீட் பிக்சர்ஸ் சார்பில் வி.ஆர்.வி.குமார் தயாரிக்க, கவுதமன் கணபதி எழுதி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் அறிவழகன் கலந்துகொண்டார். மற்றும்...

தலைவன் தலைவி விமர்சனம்...

By Ranjith Kumar
26 Jul 2025

மதுரை ஒத்தக்கடையில் சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தும் விஜய் சேதுபதிக்கும், அவரது காதல் மனைவி நித்யா மேனனுக்கும் இடையே நடக்கும் சண்டையும், இரு குடும்பத்தாரின் தலையீடும் அவர்களை பிரித்ததா? சேர்த்ததா என்பது திரைக்கதை. அவர்களுக்கு இடையே என்ன சண்டை? இருவீட்டாரின் பஞ்சாயத்து சுபமாக முடிகிறதா என்பது கதை. ஆகாச வீரனாக, பரோட்டா மாஸ்டராகவே வாழ்ந்துள்ளார்...

சுஷாந்த் மரணத்துடன் ஏதோ தொடர்பு? மீண்டும் கதறிய தனுஸ்ரீ தத்தா

By Ranjith Kumar
26 Jul 2025

மும்பை: சமீபத்தில் வீடியோ வெளியிட்டு கதறிய தனுஸ்ரீ தத்தா, நடிகர் சுஷாந்த் மரணத்துடன் ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்வதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக எனது வீட்டில் தொடர் துன்புறுத்தல்களையும், உயிருக்கு அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன் என்று கூறி உதவி...

தமிழ் படங்களை தயாரிக்க இலங்கையில் புது பட நிறுவனம் துவக்கம்

By Ranjith Kumar
26 Jul 2025

கொழும்பு: இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள்...