8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் நடிகை
வட இந்தியாவில் பிறந்தாலும் தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருபவர் லாவண்யா திரிபாதி. ‘அந்தாள ராட்சசி’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ‘மாயவன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாவாண்யா, நடிகர் வருண்...
நடிகைக்கு புரபோஸ் செய்த 17 வயது சிறுவன்
திரைப் பிரபலங்களை பார்த்தால் அவர்களுடன் செல்ஃபி எடுக்கவேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள். அதில் சிலர் போட்டோ எடுப்பதோடு நிறுத்தாமல் தங்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் நடிகைகளின் சமூக வலைத்தளத்தில் மெசேஜ் அனுப்புவார்கள். அந்தவகையில் மலையாள நடிகை ஒருவரிடம் 17 வயது சிறுவன் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறான். சமீபத்தில் மலையாள நடிகை...
‘லோகா’ யூனிவர்ஸில் இணையும் மம்மூட்டி
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. சூப்பர்வுமன் சப்ஜெக்ட்டில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய...
வெளியில் தலைகாட்ட தயங்கும் ஸ்ரீகாந்த்
சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடித்த ‘சத்தமின்றி முத்தம் தா’, ‘மாய புத்தகம்’, ‘தினசரி’, ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஷ்வினி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக்மெயில்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக...
நெருக்கமான காட்சிகளுக்கு ஓகே சொல்லும் ஸ்ரத்தா
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கேமியோ ரோல் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரத்தா நாத். தொடர்ந்து ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘இருகப்பற்று’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ என்ற படத்திலும், நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும்...
அடுத்தடுத்த சம்பவம் பயந்துபோன நடிகை
நடிகர் ‘சிக்கல்’ ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரவின் விழிகள்’ படத்தை மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி சிறந்த துளு படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘பிங்காரா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தற்போது...
விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து வைக்கும் ‘‘நாகரிக பயணம்‘‘!
ரிச் மூவிஸ் - டிஎஸ்கே மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. விவசாயத்தை மையமாகக் கொண்ட இக்கதை உருவாகியிருக்கிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம்,...
நெகட்டிவ் வேடம் சர்வா விருப்பம்
சென்னை: ‘ஹார்ட் பீட்’ வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரைக்குள் நுழைந்துள்ளார். சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கும் சர்வா, படிக்கும்போதே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார், தற்போது வெப் சீரிஸில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தன் திறமையால் இப்போது வெள்ளித்திரையிலும் அசத்த ஆரம்பித்துள்ளார். ‘ஆர்.கே. நகர’...
தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் படத் தலைப்பு
சென்னை: வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும்...