தேர்தலில் போட்டியா? சூர்யா மறுப்பு
சென்னை: சமீப நாட்களாக நடிகர் சூர்யா, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இது பொய்யான செய்தி என்று சூர்யா தரப்பு விளக்கம் தந்துள்ளது. ‘‘வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி சூர்யாவின்...
ஆண்டுதோறும் சமூக சேவைக்கு ரூ.30 கோடி செலவிடும் மகேஷ் பாபு
ஐதராபாத்: தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மகேஷ் பாபு, பல ஏழைகளுக்கு வாழ்வளித்தவர். 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மகேஷ் பாபுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கில் நடிகர் மகேஷ் பாபு சம்பாதிக்கிறார். எனவே ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 முதல் 30 கோடி...
ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள அரசு கவுரவம்
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் வில்லன் வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் பலமுறை சைமா விருது, எடிசன்...
அனுபமாவை அவமானப்படுத்திய ஆடிஷன்
மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப் போகாதே’, ‘சைரன்’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ என்ற படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்துள்ளார். தவிர, ‘லாக்டவுன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தான் அவமானப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘பட...
10 டிக்கெட்டுக்கு 5 டிக்கெட் இலவசம்
விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா நடித்துள்ள படம், ‘கடுக்கா’. விஜய் கவுரிஷ் புரொடக்ஷன்ஸ், நியாந்த் மீடியா அன்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் நிறுவனங்களுக்காக கவுரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி தயாரித்துள்ளனர். எஸ்.எஸ்.முருகராசு எழுதி இயக்கியுள்ளார். சதீஷ் குமார் துரைக்கண்ணு ஒளிப்பதிவு செய்ய, கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ளார்....
முன்னழகு சிகிச்சை பெற்ற திஷா பதானி
பல்வேறு மொழிகளில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள், திஷா பதானி தனது முன்னழகை அதிகரிக்க, விலா எலும்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக...
செப்டம்பர் 19ல் ‘தண்டகாரண்யம்’
தமிழில் வெளியான ‘லப்பர் பந்து’ என்ற படம், ‘அட்ட கத்தி’ தினேஷுக்கு வெற்றிகரமாக அமைந்தது. தற்போது அவர் ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்துக்கு பிறகு அதியன் ஆதிரை எழுதி இயக்கியுள்ள இதில், முக்கிய வேடங்களில் கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி நடித்துள்ளனர்....
வீடியோ கேமில் சாதித்த சமீரா ரெட்டி
தனது சொந்த வீடியோ கேமில் முதன்மை கதாபாத்திரமாக தோன்றிய முதல் இந்திய நடிகை என்ற பெருமையை சமீரா ரெட்டி பெற்றுள்ளார். அவரது திரைப்பயணத்தை தொடர்ந்து, ஒரு வீடியோ கேமில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றியது அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை கொடுத்தது. 2006ல் வெளியான ‘சமீரா: வாரியர் பிரின்ஸஸ்’ என்ற வீடியோ கேம், அவரை மையப்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட...
மணிரத்னத்தை மடக்கிய நாகார்ஜூனா
1961ல் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்த தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நாகார்ஜூனா, 1986ல் தெலுங்கில் ரிலீசான ‘விக்ரம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இது 1983ல் இந்தியில் ரிலீசான ‘ஹீரோ’ என்ற படத்தின் ரீமேக். 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த படம், ‘கீதாஞ்சலி’. இளையராஜா இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு...