சென்னை: சாக்ஷி அகர்வால், 2013-ல் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ‘யோகன்’, ‘திருட்டு விசிடி’, ‘ஆத்யன்’, ‘காதலும் கடந்து போகும்’, ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மணை 3’, ‘பகீரா’, ‘ஃபையர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ‘தி கேஸ் டைரி’ மலையாள படம் வெளியானது. சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ப்யூர் வெஜிடேரியனான நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போது தான் தூக்கி எறிந்தேன்.
இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார். அத்துடன் தனது உணவில் பன்னீருக்கு பதிலாக சிக்கன் துண்டுகள் இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு பன்னீருக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய உணவகத்துடன் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் எச்ஆர்எக்ஸ் (HRX) என்கிற ஃபிட்னஸ் நிறுவனம் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதனால் தனது பதிவில் ஹிரித்திக் ரோஷனையும் குறிப்பிட்டு, புகார் கூறியுள்ளார் சாக்ஷி அகர்வால்.