கன்னட திரைக்கலைஞர்கள் உருவாக்கியுள்ள பான் இந்தியா படம், ‘கரிகாடன்’. இப்படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஆக்ஷனும், அமானுஷ்யமும் கலந்த இப்படத்தில் காடா நடராஜ், நிரிக்ஷா ஷெட்டி, பேபி ரித்தி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா, திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி, விஜய் சந்தூர், சந்திரபிரபா, கரிசுப்பு, கிரி, பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் நடித்துள்ளனர். கில்லி வெங்கடேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
அதிஷய் ஜெயின், ஷஷாங்க் சேஷகிரி இசை அமைத்துள்ளனர். ஜீவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி, கவுடல்லி சாஷி அரங்கம் அமைத்துள்ளனர். தீபக் சி.எஸ் எடிட்டிங் செய்ய, ராம் கிரண் நடனப் பயிற்சி அளித்துள்ளார். ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர், ரவிகுமார் எஸ்.ஆர்., திவாகர் பி.எம் இணைந்து தயாரித்துள்ளனர். காடா நடராஜ் கதை எழுதியுள்ளார். சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா, சக்கராயபட்னா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.
