Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பொங்கலுக்கு வருகிறது ‘பராசக்தி’

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம் என்பதும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றின் மிக முக்கிய திருப்புமுனை சம்பவமான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, காரைக்குடி, இலங்கை ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `பராசக்(தீ) பரவட்டும்’ என்று குறிப்பிட்டு, வரும் 2026 ஜனவரி 16ம் தேதி படம் திரைக்கு வருவது உறுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் நடித்த கடைசி படமான ‘ஜன நாயகன்’, வரும் 2026 ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.