Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பூங்கா படத்தில் நா.முத்துக்குமார் பாடல்கள்

சென்னை: ஜாகுவார் தங்கம், இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, ‘பூங்கா’ படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர். அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் ‘பூங்கா’ படத்தில் கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு - ஆர்.ஹெச்.அசோக், இசை - அகமது விக்கி, எடிட்டிங் - முகன் வேல். தயாரிப்பு - கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன். நா.முத்துக்குமார் முன்பு எழுதிக் கொடுத்த இரண்டு பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.