மும்பை: பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய மொழியில் நடித்து வரும் ஜான்வி கபூர், திரைத்துறையில் தான் சந்தித்த சில பிரச்னைகள் குறித்து பேசிய கருத்துகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஜான்வி கபூர் கூறுகையில், ‘நான் பலமான திரைப்பட பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், இங்கு வந்த பிறகுதான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். திரைத்துறையில் சிறந்து விளங்க ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் நான் நிறைய போராடியிருக்கிறேன். நான்கு பெண்கள் இருக்கும் இடத்தில், எனது கருத்தை நான் தைரியமாக வெளிப்படுத்த முடியும். ஆனால், அந்த இடத்தில் நான்கு ஆண்கள் இருந்தால், எனது கருத்தை என்னால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது. சில நேரங்களில் அமைதியாகவே இருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற அரசியலை நான் நிறைய எதிர்கொண்டிருக்கிறேன்’ என்றார். இந்த கருத்துக்கு பல நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
